சீனாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள்

user 27-Jan-2026 இந்தியா 37 Views

சீனாவும் இந்தியாவும் நல்ல நண்பர்களும் பங்காளர்களும் மாத்திரமல்லாமல் சிறப்பான அயல்நாடுகளும் கூட என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு தினத்தின் நிமித்தம் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் நேற்று குறிப்பிட்டது.

 

சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்நிறுவனம் வௌியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு முதல் சீனா- இந்தியா உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வளர்ச்சியடைந்து வருகின்றன, உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் முன்னேற்றுவதற்கும் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகள் என்பது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சரியான தெரிவு என சீனா எப்போதும் நம்புகிறது. இரு தரப்பினரும் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவார்கள். ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவுகளை மேம்படுத்த ஒருவருக்கொருவர் கவலைகளை நிவர்த்தி செய்வார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

2020 இல் இந்திய – சீன எல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. என்றாலும் பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்களைத் தொடர்ந்து கடந்தாண்டு உறவுகளை மேம்படுத்தத் தொடங்கியதோடு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டமை தெரிந்ததே. ரொய்ட்டர்ஸ்

Related Post

பிரபலமான செய்தி