சுமார் 64,000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் !

user 12-Nov-2024 இலங்கை 1376 Views

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்காக, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கடமைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

12,227 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் நேரடியாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் 13,314 தொகுதிகளுக்கு 13,383 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவரிடமும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி