யாழில் சுமார் 102 கி.கி கேரள கஞ்சா மீட்பு...

user 05-Aug-2025 இலங்கை 121 Views

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 102 கி.கி 350 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா, ரூ. 23 மில்லியனை விட அதிகம் மதிப்புள்ள ஒரு தொகையை கடற்படையினர் நேற்று (040 கைப்பற்றினர்.

அதன்படி, யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்புக்கு அருகிலுள்ள பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் வைக்கப்பட்டிருந்த 02 சந்தேகத்திற்கிடமான பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 102 கி.கி 350 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு ரூஇ 23 மில்லியனுக்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது,

மேலும் கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Related Post

பிரபலமான செய்தி