ஜோர்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது மை ஊற்றிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி!

user 18-Nov-2024 இலங்கை 3267 Views

ஜோர்ஜியாவில் நேற்றைய தினம் தேர்தல் முடிவை அறிவிக்க தயாராக இருந்த தேர்தல் தலைவர் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கறுப்பு நிற மையினை  ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டியே குறித்த அதிகாரி முகத்தில் மை ஊற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி