தமிழ்நாட்டின் ஆட்சி யார் வசம்? ஆரம்பமாகவுள்ள வாக்கெண்ணும் பணிகள்....

user 04-May-2026 இந்தியா 39 Views

 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் திகதி இடம்பெற்றது.தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை இன்று நடக்​கிறது.

234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு அஞ்சல் மூல வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன்  40க்கும் மேற்பட்ட துணை இராணுவ படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பார்வையிட முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், குறித்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப்போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​.எல்.​ஏக்​களை பாது​காக்க மாமல்​லபுரத்​தில் ஏற்​பாடு​களை த.வெ.க. செய்​துள்​ள​தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்​நிலை​யில், மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள ஒரு தனி​யார் விடு​தியை த.வெ.க​வினர் தயார் செய்து வைத்​துள்ள தகவல் கசிந்​துள்​ளது. வெற்றி பெறும் வேட்​பாளர்​களை அங்கு தங்க வைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. 

Related Post

பிரபலமான செய்தி