தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து !

user 17-Nov-2024 இலங்கை 207 Views

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை. இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும் என நான் நம்புகின்றேன்.

அதேநேரத்தில் இப்போது வரையில் யாரையும் யாரும் தீர்மானித்ததாகவும் எனக்குத் தெரியவும் இல்லை. எனினும், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் வேறு எவரும் யாருடனேயும் ஏதும் பேசியிருக்கின்றார்களோ என்றும் தெரியவில்லை.

ஆனாலும், கட்சியைப் பொறுத்த வரையில் இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கட்சியின் அரசியல் குழு கூடி இந்த நியமனம் தொடர்பில் நிச்சயம் ஒரு முடிவு எடுக்கும்” என்றார். 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி