கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் விளக்கமறியல் !

user 13-Nov-2024 இலங்கை 229 Views

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த 12 பேரும் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை (12) கைது செய்யப்பட்டு மயிலிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். 

இதன் பின்னர், யாழ்ப்பாண நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

தொடர்ந்து, அவர்கள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி