சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்திய பூனை கைது

user 27-May-2025 சர்வதேசம் 156 Views

செல்லப் பிராணிகளிலே மிகவும் விசித்தரமாக பழகக்கூடியது பூனை. பூனையின் சேட்டைகள் எனப் பல காணொளிகள் இணையத்தில் உள்ளன. ஆனால் இங்கு ஒரு பூனை சிறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த கோஸ்டாரிகா சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்திய பூனை சோதனையின்போது பிடிபட்டது.

இரவு நேரத்தில் சோதனையின்போது அதிகாரி ஒருவர் சிறையில் இந்த பூனையைக் கண்டுபிடித்தார். பூனையின் உடலில் 235.65 கிராம் கஞ்சா மற்றும் 67.76 கிராம் ஹெரோயின் அடங்கிய பொட்டலங்கள் ஒட்டப்பட்டிருந்தன. போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பூனையை தேசிய விலங்குகள் சுகாதார மையத்திடம் ஆரோக்கிய மதிப்பீட்டிற்காக ஒப்படைத்தனர்.

Related Post

பிரபலமான செய்தி