குற்றச்செயல்களின் கூடாரமாக மாறிவரும் தாயகம் !

user 13-Dec-2024 கட்டுரைகள் 351 Views

நாள்தோறும் அதிகரித்து வரும் சட்டவிரோத குற்றச்செயல்களினால் தாயகம் தனது பாதுகாப்பை  இழந்து வருவதாக தோன்றுகிறது. அண்மைக்காலமாகவே தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறான குற்றச்செயல்கள் பெருகி வருகின்றன. அன்றாடம் கொள்ளை , கொலை , மோசடி , வாள்வெட்டு,  சட்ட விரோத மதுபான உற்பத்தி , போதைப்பொருள் பொருள் கடத்தல் , சட்டவிரோத மணல் அகழ்வு என குற்றப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

எங்காவது ஒரு மூலையில் போதைப்பொருட்கள் மீட்கப்படுவதனை நாம் செய்திகளின் வாயிலாக வந்து போதை பொருள் குற்றவாளிகள் உண்மையில் எங்கிருந்து வருகின்றனர் ? அவர்களின் தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களில்லை. எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதனை செய்கின்றனர். எமது சமூகத்தை சீரழிக்கின்றனர். இவர்களின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் இயங்குவதாக தகவல்  அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்துள்ள போதை பொருள் பாவனையால் தாயகத்தின் இளம் சந்ததியினர் தங்கள் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றனர் தங்கள் எதிர்காலத்தை இழந்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிகரித்து வரும் பண மோசடியால் பலரும் பல்வேறு வகையில் தங்களது பணத்தினை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.  எதிர்காலத்தை எண்ணி கனவு கண்டவர்களின் வாழ்க்கை இதன் பின்னர்  இருள்மயமாகியுள்ளது. புத்திசாலித்தனமாக செயற்படுகின்றார்களா?  அல்லது எமது மக்கள் ஏமாளிகளாக உள்ளனரா  ? எங்களால் யூகிக்க முடியவில்லை.இத்தனை நடந்தும் இவைப் பற்றி எமது தமிழ் அரசியல் தலைமைகள் வாய் திறப்பது இல்லை. எனவே இவர்களும் இக்குற்றச் செயல்களின் பங்குதாரர்களோ ? என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

 

இவற்றுக்கு என்ன காரணம்?

இக்குற்றச் செயல்களின் பின்னணியில் பலமான ஆதரவு மறைமுகமாக எங்கிருந்தோ கிடைக்கின்றது. ஒரு சில விடயங்களில்  அரசியல் பின்னணியும் இருப்பதாக கூறப்படுகின்றது. இக்குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் வானில் இருந்து குதித்து விடவில்லை எம்மோடு தான் உலாவி வருகின்றனர் .இந்த விஷமிகள் தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல்வாதிகளின் ஆதரவினால் தன்னை காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர்.  எத்தனையோ துயரங்களை அனுபவித்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்பும்போது இவ்வாறான பாதுகாப்பற்ற சூழல் மக்களை மீண்டும் நரகத்தை நோக்கி தள்ளும்.

எமது தமிழ் அரசியல் தலைமைகள் யோசிக்க வேண்டும். இப்போது நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு எமது மக்களே காரணம் அதை நினைவில் பதியுங்கள்.தாயகத்தில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது தமிழ் அரசியல் தலைமைகளின் பொறுப்பே ஆகும். நடைபெறும் இக்குற்றச் செயல்களை கண்டு கொள்ளாமல் செல்வீர்களானால் அந்த குற்றச்செயல்களின் பின்னணியில் நீங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது போல் இருக்கும். எனவே இதற்கான தீர்வை வழங்குவதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.

Related Post

பிரபலமான செய்தி