காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை பயணிகளுக்கு விசேட அறிவிப்பு...

user 23-Oct-2025 இலங்கை 27 Views

தமிழ் நாடு நாகப்பட்டினம் மற்றும் யாழ். காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் சேவை நவம்பர் மாதம் இடை நிறுத்தப்படும் என அந்த கப்பல் சேவையை நடத்திவரும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் சேவை நடைபெறும் என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்..

 

சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது.அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படும். இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் சேவையை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.இதனால் நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படும். நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் சேவை நடைபெறும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுந்தர்ராஜன் மேலும் தெரிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி