2029 ஜனாதிபதி வேட்பாளராகும் திட்டம் பரபரப்புக் கூற்றுடன் அர்ச்சுனா...

user 25-Sep-2025 இலங்கை 61 Views

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கும் அளவுக்கு தன்னை பிரபலமாக்குவதாக சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அரசு நாட்டிலே வடக்கு, கிழக்கு என்ற ஒரு பகுதி இருப்பதை தற்போதைய அரசாங்கம் மறந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை விடயங்களை வழங்கி விட்டு பிச்சை போட்ட எண்ணத்தில் அரசாங்கம் திரிகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒற்றிமையின்மையே இதற்கான காரணம். ஆகவே, எதிர்வரும் நாட்களில் தமிழ் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட தீர்மானித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியுள்ளார்.  

Related Post

பிரபலமான செய்தி