உலக கோடீஸ்வரர்கள் :அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..!

user 09-Dec-2024 சர்வதேசம் 1368 Views

உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சொந்த நாடு மற்றும் மற்ற நாடுகளில் பெரிய அளவில் வணிகம் செய்து வருகின்றன. அவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக உலக அளவிலான தொழில் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோடீஸ்வரர்களில் எந்த நாட்டில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்பது குறித்து சர்வதேச நிறுவனம் ஒன்று ஆய்வு செய்துள்ளது.

2024ம் ஆண்டின் கணக்கின்படி உலக அளவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடாக அமெரிக்கா(us) முதல் இடத்தில் உள்ளது. 835 பேர் அமெரிக்காவின் மிகப்பெரும் தனவந்தர்களாக உள்ளனர்.

அதை தொடர்ந்து சீனா(china) இரண்டாவது இடத்தில் 427 பெரும் கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது. அதற்கு பிறகு இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக உள்ளது..

185 கோடீஸ்வரர்கள், பெருநிறுவன முதலாளிகள் இந்தியாவில் உள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியா(india) ஏழை நாடு என்ற சொல் பல நாடுகளிலும் இருந்து வரும் நிலையில், அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் முதல் 10 இடங்களில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி