வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் முன்னெடுப்பு !

user 30-Jan-2025 இலங்கை 206 Views

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் நேற்று (29) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இதன்போது பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டது.

வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரயோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக மாவட்ட செயலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தமை தொடர்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்த அழைப்புக் கட்டளையும் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது.

Related Post

பிரபலமான செய்தி