ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் நன்கொடை

user 05-Jul-2025 சர்வதேசம் 30 Views

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஜப்பான் அரசாங்கம் , பல தொழில்நுட்ப உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் , புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் (International Organization for Migration - IOM) துணையுடன் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் எல்லை தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் திட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. அதன்படி ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதல்முதலில் அறிமுகப்படுத்தப்படும் பல தொழில்நுட்ப உபகரணங்கள் இதில் அடங்குகின்றன. அத்துடன் இலங்கைக்கு மேலும் பல நன்கொடைகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி