சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கன்சிகா...

user 17-Jul-2025 இலங்கை 174 Views

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5ஆம் தரத்தில் இவர் பயின்று வருகிறார்.

குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி