முள்ளிவாய்க்கால் கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !

user 19-Dec-2024 இலங்கை 833 Views

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் இன்று(19.12.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகானது திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது.

இந்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related Post

பிரபலமான செய்தி