பொலிஸ் பாதணிகளை அணிந்து வழக்குக்கு சென்றவர் கைது..

user 03-Nov-2025 இலங்கை 23 Views

பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்து புதுக்கடை மேல் நீதிமன்றத்திற்கு சென்ற, போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய , ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்ததற்காக சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந் நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக வந்த போது பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் போது, ​​பகோடை போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனக்கு குறித்த பாதணிகளை கொடுத்ததாகக் சந்தேக நபர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Post

பிரபலமான செய்தி