இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது !

user 20-Feb-2025 இலங்கை 151 Views

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 இந்திய கடற்றொழிலாளர்களும் மூன்று ட்ரோலர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை தளங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்படி 10 இந்திய கடற்றொழிலாளர்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி