புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுகள் இன்று (21) நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வின் போது சபாநாயகர் தெரிவு முதலில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவின் பின்னர், பிரதி அமைச்சர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.