பொலிஸாரின் தாக்குதலில் ஆலய பாதுகாப்பு ஊழியர் பலி

user 03-Jul-2025 இலங்கை 26 Views

இந்தியா தமிழநாடு சிவகங்கை திருப்புவனம் பிரபல பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் பொலிஸாரால் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகங்கை திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27 பெண் ஒருவரும் தாயாரும் இளைஞர் மீது கொடுத்த பொய்யான முறைப்பாட்டினை அடுத்து , இளைஞனை பொலிஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து இளைஞன் அஜித்குமார் மரணம் அடைந்த விவகாரத்தில், அவரை தாக்கியதாக  பொலிசார் ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொலிஸாரால் இளைஞர் அஜித் குமார் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதையும் கொந்தளிக்க வைத்துள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி