நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்காக மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, தொழில் அமைச்சு, தெங்கு ஆராய்ச்சு நிறுவனம், தென்னை பயிர்ச்செய்கை சபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேங்காய் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிறிலங்கா தேங்காய் தொழில் சபை ஆகியன இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.