வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலம் என்பதால் பாதை வழுக்கும் தன்மையில் உள்ளதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்டுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.