யாழ் முகாமிலிருந்த இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்...

user 13-May-2025 இலங்கை 118 Views

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உத்தியோகத்தர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று  காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

ஆகையால் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி