ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

user 22-Dec-2024 சர்வதேசம் 998 Views

கனடாவின்  பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியாக இருந்த  புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் திட்டமிட்டுள்ளார் எனவும், இதனால்  கனடாவில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங், ஜனவரி மாதம் 27ஆம் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது,ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டுமென கனடாவில் கோரிக்கை வலுத்துவருகிறது.

கனடாவில் அடுத்த பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது. அவ்வாறு தேர்தல் நடைபெற்றால், தேர்தலில் ஆளும் ட்ரூடோவின் லிபரல் கட்சி படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் திடீரென ஜக்மீத் சிங் கட்சி, ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி