காலையில் நேபாளத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் நிலநடுக்கம் !

user 07-Jan-2025 சர்வதேசம் 907 Views

நேபாளத்தில் (Nepal) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (7.1.2024) காலை 06.50 மணி அளவில் ஏற்பட்ட  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து, இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post

பிரபலமான செய்தி