இந்தியாவில் பங்கேற்பு இல்லாத பாகிஸ்தானின் செம்பியன்ஸ் கிண்ணம் !

user 28-Nov-2024 விளையாட்டு 62 Views

2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்படவுள்ள சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து, நாளை (29) வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தானில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என்று சர்வதேச கிரிக்கட் சம்மேளனம், பாகிஸ்தானிய கிரிக்கட் நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டிகளின் அட்டவணை குறித்து தெளிவற்ற நிலை இதுவரை நிலவுகிறது.

இந்தநிலையில் நாளைய தினம், துபாயில் சர்வதேச கிரிக்கட் சம்மேளன அதிகாரிகள் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.

இந்த சந்திப்பின்போது, இந்திய அணியின் விடயம் பேசப்படும் என்று சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செம்பியன்ஸ் போட்டிகள் 2025 பெப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரையில் நடத்தப்படவுள்ளன. பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பாகிஸ்தானில் நடத்தப்படும் போட்டிகளுக்கு செல்லப்போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.

எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம், செம்பியன்ஸ் போட்டிகளுக்கான பாதுகாப்பு அச்சத்தை நிராகரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முன்னணி அணிகளுடனான போட்டிகள், அண்மைக்காலத்தில் தமது நாட்டில் நடத்தப்பட்டமையை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாளைய தினம் இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

1996 உலகக் கிண்ணத்தை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்திய பின்னர், பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் போட்டித்தொடராக செம்பியன்ஸ் கிண்ணம் அமைந்துள்ளது.

 

 

Related Post

பிரபலமான செய்தி