FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல் (அமெரிக்காவுடனான மோதலால் அதிரடி முடிவு)

user 12-Mar-2026 விளையாட்டு 28 Views

ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது டோன்யாமாலி, தமது நாடு இம்முறை உலகக்கிண்ணத்தில் பங்கேற்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 28,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமது நாட்டின் தலைவரையே படுகொலை செய்த ஒரு நாட்டில் (அமெரிக்கா) தமது வீரர்கள் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல” என ஈரான் தரப்பு வாதிடுகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, 2026 FIFA உலகக்கிண்ணப் போட்டித் திட்டங்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது. “சமாதானத்திற்காக தனித்துவமான மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்தவர்” மற்றும் “உலக மக்களை ஒன்றிணைத்தவர்” என்ற கௌரவத்தின் அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி