தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாக பார்க்கப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanagaratnam) தெரிவித்துள்ளார்.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (12.03.2025) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா? காணாமல் போன மக்களை கண்டுபிடித்து கொடுத்ததா?
அதேநேரம், பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கினார்களா? அல்லது நில ஆக்கிரமிப்பை நிறுத்திக் கொண்டார்களா? இல்லை.
அவர்கள் கூறியது வடக்கின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மாத்திரமே என தெரிவித்துள்ளார்.