அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் !

user 11-Feb-2025 விளையாட்டு 196 Views

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும்(australia cricket team) இலங்கை அணிக்கும்(sri lanka cricket) இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான  சிறிலங்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டு புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் புதுமுக துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்கா மற்றும் மஹா நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இலங்கை அணி வருமாறு, - சரித் அசலங்க (அணித்தலைவர்), பத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹிஷ் திக்சனா, துனித் வெல்லேஜ், ஜெஃப்ரி வந்தசே, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, முகமது ஷிராஸ், எஷான் மலிங்க

 

Related Post

பிரபலமான செய்தி