சீனத் தூதுவரின் கருத்துக்களை ஏற்க முடியாது !

user 30-Nov-2024 இலங்கை 101 Views

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவரான சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam ) தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள்,  தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன கருத்துக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிப்பதோடு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான செயல் அல்ல.

உண்மையில் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி விட்டார்கள் என கூற முடியாத நிலையில், சீனா தூதுவர் எந்த அடிப்படையில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பில் கேட்க விரும்புகிறேன்.

உண்மையில் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி விட்டார்கள் என கூற முடியாத நிலையில், சீனா தூதுவர் எந்த அடிப்படையில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பில் கேட்க விரும்புகிறேன்.

தெற்கு கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் ஒரு பகுதியினர் அங்கஜன் டக்ளசை நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமையே உண்மையான விடயம்.

இவற்றை அறியாத சீனத்தூதுவர் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட தயாராகிவிட்டனர் என்ற கருத்தை கூறுவது தமிழ் மக்களை வேண்டுமென்றே தவறான பாதையில் இட்டு செல்வதாக பார்க்க முடியும்.

தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு தமது ஆதரவை கொடுத்து வரும் நிலையில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் சீன தூதுவர் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி