யாழில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிய இளைஞர்கள் கைது...

user 02-Dec-2025 இலங்கை 31 Views

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 30 ஆம் திகதி நபரொருவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

 

இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபரும், அவருக்கு உதவிய 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு வேன், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட 03 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி