அர்ச்சுனாவை தொடர்ந்து இறுதி யுத்தத்தை நாடாளுமன்றில் நினைவுகூர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

user 07-Dec-2024 இலங்கை 1739 Views

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில், தமிழ் மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றில் நேற்று (06) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கும், எமது தலைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறி அவர் நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தங்களின் சுயலாப நோக்கத்திற்காகவே செயற்பட்டனர் இதனால் எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டு, பெரும் சிக்கல்களை சந்தித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி அவரது அக்கிராசன உரையில் சகல மக்களுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும், நம்பிக்கையளிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் அந்த விடயம் பாராட்டத்தக்கது" என அவர் தெரிவித்துள்ளார்.  

Related Post

பிரபலமான செய்தி