அர்ச்சுனா எம்பி ஆல் தாக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை!

user 13-Feb-2025 இலங்கை 354 Views

யாழ்ப்பாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் பீங்கானால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று  இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அர்ச்சுனா எம்பி , அந்நபர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்பி தனது கையக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், அர்ச்சுனா, ஒருவரை பீங்கானால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

எனினும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு முன்னர் சம்பவ இடத்தில் நடந்த வாக்குவாதம் தொடர்பிலான வீடியோவை எம்பி அர்ச்சுனா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Related Post

பிரபலமான செய்தி