இ.தொ.காவை மறுசீரமைக்க நடவடிக்கை !

user 12-Dec-2024 இலங்கை 1036 Views

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவிதுள்ளார்.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில்  நேற்று (11.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கணபதி கணகராஜ்  இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கூடத்தில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம்.ராமேஷ்வரன் ஆகியோர் தலைமையில் தேசிய சபை கூடியது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ்  அறிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி