பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு !

user 23-Jan-2025 இலங்கை 198 Views

வழக்கு ஒன்றிற்கு முன்னிலையாகாத காரணத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு, 50,000 செலவீன தொகையை வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்னுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் , முன்னாள் பிரதி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) அவமதித்து கருத்து வெளியிட்டதாக கூறி, கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில், இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகியதோடு  அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும், முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில், வழக்குத் தாக்கல் செய்த சிவனேசதுரை சந்திரகாந்தன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது .

இதன்போது, எதிர் தரப்பில் கருத்துக்களை முன்வைத்த சுமந்திரன், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த நீதிமன்றத்துக்கு உடைமையாக்கும் அதிகாரம் இல்லை என வாதத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த சிவனேசதுரை சந்திரகாந்தன், வழக்கு செலவினமாக எதிர்த்தரப்புக்கு  50,000 ரூபா வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி