14 வயது சிறுமியை விபச்சார தொழில் ஈடுபடுத்திய நபருக்கு நேர்ந்த கதி !

user 13-Dec-2024 இலங்கை 1852 Views

 14 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய 31 வயதுடைய நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குற்றவாளிக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 450,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியை சட்டவிரோதமாக காவலில் வைத்தது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொருவரும் தங்கள் தாய், சகோதரி மற்றும் மனைவியை மதிப்பது போல் சமுதாயத்தில் அறிவு முதிர்ச்சி அடையாத இதுபோன்ற பிள்ளைகளை மதிக்க உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இதுபோன்ற பிள்ளைகளை சட்டவிரோதமாக நடத்தும் இதுபோன்ற நபர்களை நீதிமன்றம் ஒருபோதும் மன்னிக்காது என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் போது நீதிபதி கூறினார்.

Related Post

பிரபலமான செய்தி