ஊடகவியலாளர் நிலாந்தனை களமிறக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி!

user 14-Mar-2025 இலங்கை 206 Views

மட்டக்களப்பு (Batticaloa) -  ஏறாவூர் (Eravur) பற்று பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தனை பிரதான வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் இம்முறை தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செங்கலடி ஏறாவூர் பற்று, வாழைச்சேனை போன்ற பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவதில் சவால்கள் உள்ள நிலையில் ஏறாவூர் பற்று பிரதேச சபை கைப்பற்றும் நோக்கில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான நிலாந்தனை பிரதான வேட்பாளராக களம் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

செங்கலடி பிரதேசத்தில் வசிக்கும் ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் கடந்த 2002 ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டவர்.

இவர் சிவில் சமூக செயற்பாட்டாளராவும் செயற்பட்டாளராகவும், இலஞ்ச ஊழலை ஒழிப்பதிலும் முன் நின்று செற்பட்டவர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தனது குரலை ஊடகத்துறை ஊடக வெளிப்படுத்தி வரும் இவர் அரச புலனாய்வு துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் பல்வேறு விசாரணைகளுக்கு முகம் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி