12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை !

user 31-Dec-2024 இலங்கை 1220 Views

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி (Hansaka Wijemuni) ஏற்கனவே அறிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பை அவர், கடந்த ஆறாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் விடுத்திருந்த நிலையில், தற்போது அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related Post

பிரபலமான செய்தி