இந்தியாவில் 35 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள அமேசான்!

user 10-Dec-2025 இந்தியா 17 Views

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வணிகங்களிலும் 35 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அமேசான் (Amazon ) செவ்வாயன்று (09) அறிவித்துள்ளது.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு தலைமையிலான மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அதன் நீண்டகால உறுதிப்பாட்டை ஆழப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமையவுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ள சுமார் $40 பில்லியனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்காக ரெட்மண்டை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியாவில் 17.5 பில்லியன் ‍டொலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

 

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா புது டொல்லியில் இந்திப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

Related Post

பிரபலமான செய்தி