இடியுடன் கூடிய மழை!

user 07-Jan-2025 இலங்கை 997 Views

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் இன்று (07) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Post

பிரபலமான செய்தி