ஆப்கான் அணியை தோற்கடித்த தென்னாபிரிக்கா !

user 22-Feb-2025 விளையாட்டு 113 Views

செம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய(21) போட்டியில் தென்னாபிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்துள்ளது.

பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தமது 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.

இதில், ரிக்கல்டன் 103 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து, 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டத்தில் தோல்வி கண்டது.

தென்னாபிரிக்காவின் ரபாடா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

Related Post

பிரபலமான செய்தி