அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி !

user 10-Mar-2025 சர்வதேசம் 63 Views

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்  (Donald Tusk) தெரிவித்துள்ளார்.

போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும்  அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும், இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர் எனவும் ஆனால் போலந்தில் 2 இலட்சம்  இராணுவ வீரர்களே உள்ளனர் எனவும்,  தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானத்தின் நோக்கம் எனவும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி