2025 ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தை தவறவிடும் பாண்டியா!

user 19-Feb-2025 விளையாட்டு 135 Views

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை ஹர்த்திக் பாண்டியா இழக்க நேரிட்டுள்ளது.

மும்பை அணித் தலைவர் கடந்த சீசனில் மெதுவான ஓவர் பரிமாற்றம் உட்பட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானர்.

ஒரு சீசனில் மூன்று குற்றங்களை அடுத்து ஐ.பி.எல். நடத்தை விதிகளின்படி அவருக்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த சீனின் போதான குறித்த போட்டியுடன் மும்பை அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை.

எனவே, தடை வரவிருக்கும் சீசனுக்கு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி, அவர் தனது பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸுடனான போட்டியை இழக்க நேரிட்டுள்ளார்.

மேலும், 5 முறை சாம்பியன்கள் முக்கியமான தொடக்க போட்டிக்காக ஒரு புதிய தலைவரை கண்டுபிடிக்க வேண்டும்.

Related Post

பிரபலமான செய்தி