ஈ டிக்கட் மோசடி தொடர்பில் மேலும் ஒருவர் கைது !

user 27-Jan-2025 இலங்கை 170 Views

ரயில் இணைய பயணச்சீட்டு (ஈ டிக்கெட்) மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கண்டி - ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து ஈ டிக்கெட்டுக்கள் இரண்டும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

32 வயதுடைய கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டார்.

 

சந்தேகநபர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி