மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !

user 29-Jan-2025 இலங்கை 188 Views

மட்டக்களப்பு (Batticaloa) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் நேற்று (28.01.2025) முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர். 

இச்சுற்றிவளைப்பு தேடுதலின் போது 23 பரல்களில் சுமார் 14 இலட்சத்து 50 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, பொருட்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Post

பிரபலமான செய்தி