கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்!

user 30-Jan-2025 இலங்கை 148 Views

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அரச அதிகாரிகள் பன்கேற்று குறித்த நியமனங்களை இன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு வளங்கிவைத்திருந்தனர்

இங்கு உரையாற்றிய ஆளுநர், வழங்கப்பட்டிருக்கும் அனைந்து நியமனக்கடிதங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் தவறாது 5 வருடங்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்

அவ்வாறு பாணியற்றிய பின்னராகவே நீங்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், இடமாற்றம் என கருதி நாளைய்தினம் எவரும் கல்வி அமைச்சுக்கோ அல்லது ஆளுநர் அலுவலகத்திற்கோ வருகை தர வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related Post

பிரபலமான செய்தி