மோசமான வானிலையால் 276,550 பேர் பாதிப்பு!

user 28-Nov-2024 இலங்கை 1784 Views

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த குடும்பங்களைச் சேர்ந்த 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் அபாயம் தொடர்ந்தும் காணப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி