மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்!

user 30-Jan-2025 இலங்கை 184 Views

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்குவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, மாவை சேனாதிராஜா ஐயா காலமான செய்தியை கேட்டு நான் மிகுந்த கவலையடைகின்றேன்.

நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.

இந்த கடினமான சூழ்நிலையை கடந்து செல்லும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Related Post

பிரபலமான செய்தி