ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முஷ்பிகுர் ரஹீம் !

user 06-Mar-2025 விளையாட்டு 74 Views

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim ) தனது ஒருநாள் சர்வதேச வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

தமது அணி ஐசிசி ஆண்கள் செம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டியில் வெற்றி பெறாமல் வெளியேறிய கடந்த சில வாரங்கள் சவாலானவை என்று கூறியுள்ள அவர், சமூக ஊடகங்களில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டி வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் நேற்று (05) அறிவித்துள்ளார்.

"உலக அளவில் எங்கள் சாதனைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் ஒன்று நிச்சயம். நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும் போதெல்லாம், 100 வீதத்திற்கும் அதிகமாக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் செயற்பட்டேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு முஷ்பிகுர் சர்வதேச அளவில் அறிமுகமானார், அடுத்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு அவர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

தனது வாழ்க்கையில் 274 போட்டிகளில் ஒன்பது சதங்கள் மற்றும் 49 அரைசதங்களுடன் 7795 ஒருநாள் ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி