கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும், முல்லைத்தீவு அமைப்புகளின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாலில் தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் கேமன்குமார மற்றும், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ், மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.